நடிகையும், பா.ஜ.க.எம்.பி.யுமான கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் சி.எஸ்.எப். பெண் காவலர் அறைந்ததாக வெளியான வீடியோவைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கங்கனாரணாவத்
நடிகை கங்கனா ரணாவத் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தநிலையில் இன்று(6 ந்தேதி) மதியம் 3.30 மணி அளவில் நடிகை கங்கனா ரணாவத் டெல்லி செல்வதற்காக சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்தார்.
அவரை விமான நிலையத்தின் உள்ளே சி.எஸ்.எப்.வீரர்கள் பரிசோதித்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த குல்விந்தர் கவுர் என்ற பெண் சி.எஸ்.எப்.வீரர் ஒருவருக்கும், கங்கனா ரணாவத்திற்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அந்த பெண் சி.எஸ்.எப்.வீரர் கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் விமான நிலையத்தில் பரரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் போராட்டம்
கோபம் அடைந்த கங்கனா ரணாவத் விமான நிலையதில் அங்கிருந்த அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தார். அவரை அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த தகராறுக்கு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு எதிராக கங்கனா தெரிவித்த கருத்துகளே காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 100 ரூபாய்க்கு அங்கு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள் என்று கருத்து கூறியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அந்த பெண் சி.எஸ்.எப்.வீரர்கேட்டபோது தான் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த கருத்து கூறப்பட்ட நேரத்தில் அந்த பெண் சி.எஸ்.எப். வீரரின் தாய் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பேச்சு எழுந்த போதுதான் ஆத்திரத்தல் அந்த பெண் சி.எஸ்.எப் வீரர் கங்கனா ரணாவத்தை தாக்கி உள்ளார்.
வீடியோ காட்சி
இதற்கிடைய கங்கனா ரணாவத் விமான நிலையத்தில் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக நடிகை கங்கனா ரணாவத் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில், “நான் நன்றாக இருக்கிறேன். விமான நிலையத்தில் நடைபெற்ற பாதுகாப்பு சோதனையின்போது அந்தச் சம்பவம் நடைபெற்றது. சோதனை முடிந்த பின், நான் செல்லும்போது அந்த பெண் காவலர் வேறு ஒரு கேபினில் அமர்ந்திருந்தார். நான் அவரைக் கடக்கும்போது அவர் என் முகத்தில் அடித்தார்; பின்பு என்னை திட்டினார்.ஏன் இப்படி செய்தாய் என்று நான் அவரிடம் கேட்டேன், அதற்கு அவர், விவசாயிகளின் போராட்டத்துக்காகதான் இப்படி செய்தேன் என்றார். பஞ்சாபில் பயங்கரவாதம் அதிகரித்து வருவதும், இதை எப்படி கையாள்வது என்பதும் தான் எனக்கு கவலை அளிக்கிறது” என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
நடவடிக்கை
இதற்கிடைய கங்கனா ரணாவத்தை தாக்கியதாக கூறப்பட்ட பெண் சி.எஸ்.எப்.வீரர் மீது துறைரிதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். மேலும்அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள்மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படியுங்கள்: சிவகார்த்திகேயனுக்கு 3-வதாக ஆண்குழந்தை