நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த நவ. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சப்தமான பின்னணி இசை மற்றும் வசனங்கள், உணர்ச்சிகளைக் கடத்தாத கதைக்களம் என சில குறைகளால் மிக மோசமான எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது.
இதனால், படம் வெளியான முதல் நாளிலிருந்தே கடுமையான தாக்குதல்களால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது.
ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை ரூ. 180 கோடிக்கும் குறைவாகவே வசூலித்திருப்பதாகத் தெரிகிறது. இந்தியளவில் ரூ. 100 கோடியையும் வெளிநாடுகளில் ரூ. 80 கோடி வரை வசூலித்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அமேசன் பிரைம் ஓடிடியில் டிச.8ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.