மலையாள நடிகை பாவனா தமிழில், சித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகமானவர்.
படங்களில் நடிக்கவில்லை
தொடர்ந்து, வெயில், தீபாவளி, ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், அசல் என பல படங்களில் நடித்து பிரபலம் ஆனார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து உச்சத்தில் இருந்தபோது அவரது வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவத்தால் படங்களில் நடிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து பாவனா கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் நடிகை பாவனா தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வந்தது.வேண்டுஎன்றே தவறான தகவல்களை பரப்பினார்கள்.
விலகி இருந்தேன்
சிலருடன் இணைத்தும் பேசினார்கள்.
ஒருகட்டத்தில் நான் உயிரோடு இருக்கும் போதே இறந்து விட்டதாக வதந்திகளை உருவாக்கினார்கள். எனக்கு சில கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதால் அதில் இருந்து வெளியே வர சில காலம் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகி இருந்தேன். தற்போது மீண்டும் பிஸியாக நடித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.