கச்சா எண்ணெயில் ஏன் எப்போதும் டிரேடிங் வாய்ப்பு உள்ளது? நிபுணர் விளக்கம்|Crude Oil Back in Focus as Global Uncertainty Rises

Spread the love

வெனிசுலா, இரான்… என எண்ணெய் வளம் மிக்க நாடுகள் இப்போது அடிக்கடி செய்திகளில் அடிப்படுகின்றன.

அதனால், இப்போது கச்சா எண்ணெய்க்கு வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம்.

“கச்சா எண்ணெய்க்கு எப்போதுமே டிரேடிங் வாய்ப்புகள் இருந்துகொண்டே இருக்கும்.

உலக அளவில் டிரேட் ஆகும் நம்பர் ஒன் கமாடிட்டி கச்சா எண்ணெய் தான்.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

தங்கம், வெள்ளி “விலை’யினால் வேண்டுமானால், அதிக கவனத்தைப் பெறலாம். ஆனால், இப்போது இல்லை… காலம் காலமாக கச்சா எண்ணெயிற்கு டிரேடிங்கில் பெரிய மவுசு உண்டு.

வாகனம் உள்ளிட்ட பல தேவைகள் கச்சா எண்ணெய்க்கு இருப்பதாலே, இந்த டிரேடிங் வாய்ப்பு.

ஒன்றில் நிலையற்ற தன்மை அதிகம் இருக்கும்போது, அதில் அதிக டிரேடிங் வாய்ப்புகள் உள்ளது. இப்போது பார்த்தால் அமெரிக்கா – இரான் பேச்சுவார்த்தை, கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள தடை என ஏகப்பட்ட நிகழ்வுகள் உலகத்தில் நடந்துகொண்டிருக்கின்றது.

ஆக, கச்சா எண்ணெய்யில் பெருமளவு நிலையற்ற தன்மை நிலவி வருகிறது.

இதனால், கச்சா எண்ணெய்க்கு எப்போதும் டிரேடிங் வாய்ப்பு உள்ளது. அதனால், அதில் டிரேடர்கள் கண் வைத்துக்கொள்வது நல்லது”.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *