கஞ்சா, கள்ளச் சாராயத்தை மத்திய அரசுதான் தடுக்க வேண்டும்: அமைச்சர் ரகுபதி | Minister Regupathy says central govt should prevent cannabis and illicit liquor

1372760
Spread the love

புதுக்கோட்டை: ‘தமிழகத்​தில் கஞ்​சா​வும் உற்​பத்​தி​யாக​வில்​லை, சாராய​மும் காய்ச்​ச​வில்​லை. வெளி மாநிலங்​களில் இருந்து வரும் அவற்றை மத்​திய அரசு​தான் தடுக்க வேண்​டும்’ என அமைச்​சர் எஸ்​.ரகுபதி தெரி​வித்தார்.

இதுதொடர்​பாக, புதுக்​கோட்​டையில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: பிஹார் மாநில வாக்​காளர் பட்​டியல் திருத்​தம் தொடர்​பான பிரச்​சினை உச்ச நீதி​மன்​றம் வரை சென்​றுள்​ளது. தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியலில் தேர்​தல் ஆணை​யம் தவறு செய்​தால், உச்ச நீதி​மன்​றம் செல்​வோம்.

தமிழகத்​தில் கஞ்​சா​வும் உற்​பத்​தி​யாக​வில்​லை, சாராய​மும் காய்ச்​ச​வில்​லை. வெளி மாநிலங்​களில் இருந்து வரும் அவற்றை தடுக்க வேண்​டியது மத்​திய அரசு​தான். மத்​திய அரசைக் குற்​றம்​சாட்​டி​னால் வரு​மானவரித் துறை, அமலாக்​கத் துறை சோதனை வந்​து​விடுமோ என்ற பயத்​தில் தமிழக அரசு மீது பாமக தலை​வர் ராம​தாஸ் குறை​கூறி வரு​கிறார். மணல் குவாரி தொடங்​கு​வது தொடர்​பாக உயர் நீதி​மன்​றத்​தில் ஓரிரு நாட்​களுக்​குள் அனுமதி கிடைத்​து​விடும் என நம்​பு​கிறோம். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *