“கடந்த மூன்று ஆண்டுகளாக அதிமுக கட்சிக்குள் இருந்து கொண்டு துரோகம் செய்தேனா” – செங்கோட்டையன் பதில் | “Did Amit Shah tell me to join the vijay’s TVK?” – Sengottaiyan’s reply

Spread the love

அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து விலகி அண்மையில் (நவ.27) தவெக-வில் இணைந்தார்.

அன்று சென்னையிலிருந்து கோபிசெட்டிபாளையத்துக்கு வந்த செங்கோட்டையனுக்கு அவரது ஆதரவாளர்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். அப்போது, செங்கோட்டையன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இதற்குப் பதிலடியாக எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையத்திலேயே ஒரு கூட்டம் போட்டு, “கடந்த மூன்று ஆண்டுகளாக கட்சிக்குள் இருந்து கொண்டு துரோகம் செய்தவர் செங்கோட்டையன்” என்று பேசியிருந்தார்.

செங்கோட்டையன் – எடப்பாடி பழனிசாமி இருவரின் இந்த மோதல்போக்குதான் கடந்த சில நாள்களாக தமிழக அரசியலில் பெரும் விவாதமாக வெடித்துக் கொண்டிருந்தது.

இதற்கிடையில் திமுக உதயநிதி ஸ்டாலின், செங்கோட்டையன் பாஜக தலைவர் அமித் ஷா சொல்லிதான் விஜய்யின் தவெகவில் இணைந்தார் என்று விமர்சித்திருந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *