கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 13 பேர் பலி

Dinamani2f2024 072ff4d62388 6842 4ad4 Ab8c B68a4efafb0e2frain.jpg
Spread the love

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 13 பேர் பலியாகியுள்ளனர்.

நிவாரணத் துறையின் அறிக்கையின்படி, வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி முதல் சனிக்கிழமை மாலை 6:30 மணி வரை, ஃபதேபூரில் மின்னல் தாக்கி இரண்டு பேர் பலியாகினர், மேலும் ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார்.

ரேபரேலி மாவட்டத்தில், மின்னல் தாக்கி ஒருவரும், மழை தொடர்பான சம்பவத்தில் மற்றொருவரும் பலியாகினர்.

புலந்த்ஷாஹர், கன்னோஜ், மெயின்புரி, கௌசாம்பி, ஃபிரோசாபாத், பிரதாப்கர், உன்னாவ் மற்றும் மைன்புரி மாவட்டங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் தலா ஒருவர் இறந்ததாக நிவாரணத் துறை தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 18.3 மிமீ மழை பதிவாகியுள்ளது.

45 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை பெய்துள்ளதாக நிவாரணத் துறை தெரிவித்துள்ளது. ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் அதிகபட்சமாக 65.5 மிமீ மழை பதிவாகியுள்ளது.

நேபாள எல்லையில் உள்ள மாவட்டங்களின்உள்ளூர் நிர்வாகத்தையும் நிவாரணத் துறை எச்சரித்துள்ளது.

நேபாளத்தில் சமீபத்தில் பெய்த கனமழையைக் கருத்தில் கொண்டு, எல்லையோர மாவட்டங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநில நிவாரண ஆணையர் நவீன் குமார் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *