கடந்த 4 ஆண்டுகளில் நாட்டுடைமையாக்கப்பட்ட 37 தமிழறிஞர்களின் நூல்கள்: அமைச்சர் பிடிஆர் தகவல் | Books by 37 Tamil scholars nationalized in the last 4 years

1377293
Spread the love

சென்னை: கடந்த 4 ஆண்​டு​களில் 37 தமிழறிஞர்​களின் நூல்​கள் தமிழ் மின் நூல​கத்​தில் நாட்​டுடைமை​யாக்​கப்பட்​டுள்​ள​தாக தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழரின் அறி​வுக் கரு​வூலங்​களை டிஜிட்​டல் முறை​யில் பாது​காக்​கும் நோக்​கத்​துடன், தகவல் தொழில்​நுட்​பம் மற்​றும் டிஜிட்​டல் சேவை​கள் துறை​யின் கீழ் இயங்கி வரும் தமிழ் இணை​யக் கல்விக்​கழகத்​தின் மூலம் தமிழ் மின் நூல​கம் தொடங்​கப்​பட்​டு, செயல்​பாட்​டில் இருந்து வரு​கிறது. இந்த மின் நூல​கத்​தில் இது​வரை லட்​சக்​கணக்​கான அரிய வகை நூல்​கள், இதழ்​கள், ஓலைச்​சுவடிகள் மின் பதிப்​பாக்​கப்​பட்டு பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளன. இந்த பணி​களின் ஒரு பகு​தி​யாக நாட்​டுடைமை​யாக்​கப்​பட்ட நூல்​களும் மின் நூல​கத்​தில் தொடர்ந்து பதிவேற்​றம் செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

அந்​தவகை​யில் திமுக அரசு பொறுப்​பேற்ற கடந்த 4 ஆண்​டு​களில் இது​வரை 37 தமிழறிஞர்​களின் நூல்​கள் தமிழ் மின் நூல​கத்​தில் நாட்​டுடைமை​யாக்​கப்பட்​டுள்​ளன. இதில் இரா.இளங்​குமர​னார், செ.இ​ராசு, கந்​தர்​வன், செ.​தி​வான், தஞ்சை பிர​காஷ், நா.மம்​மது, நெல்லை கண்​ணன், விடு​தலை இராசேந்​திரன், சோம.லட்​சுமணன், இரா.மோகன், கு.கோ​தண்​ட​பாணி பிள்​ளை, அம்​சவேணி பெரியண்​ணன், மா.சு.சம்​பந்​தன், கோ.​முத்​துப்​பிள்ளை ஆகிய 14 அறிஞர்​களின் படைப்​பு​கள் இது​வரை https://tamildigitallibrary.in/ என்ற தமிழ் மின் நூல​கத்​தின் இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளன. தொடர்ந்து பல்​வேறு நாட்​டுடைமை​யாக்​கப்​பட்ட நூல்​களை பதிவேற்​றும் பணி​களும் சீரிய முறை​யில் தொடர்ச்​சி​யாக நடை​பெற்று வரு​கின்​றன. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *