தமிழகத்தில் ஏழை, எளிய, குடிசைவாழ் மக்களுக்கு ரூ. 5,330 கோடியில் 46,929 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டிருப்பதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த நான்கு ஆண்டுகளில் வீடற்ற ஏழை, எளிய, குடிசைவாழ் மக்களுக்காக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் சென்னையில் 16,888 அடுக்குமாடி குடியிருப்புகளும், தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களில் 30,041 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் 134 திட்டப் பகுதிகளில் ரூ. 5,330 கோடி செலவில் 46,929 அடுக்குமாடி குடியிருப்புகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை கூறியுள்ளது.