கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!

Dinamani2f2024 09 222ftdvbn0tj2fpti09222024000375b.jpg
Spread the love

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.

விஜயவாடாவில் உள்ள தனது இல்லத்தில் இன்று(செப்.22) செய்தியாளர்களுடன் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கடந்த ஐந்தாண்டுகளில் திருமலையில் புனிதமான காரியங்கள் பல நடைபெறவில்லை என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

”பல முறை, பக்தர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். திருமலையில் வழங்கப்படும் லட்டு பிரசாதமும், உணவும், பரிசுத்தமான பொருள்களால் தயாரிக்கப்படுபவை, இவை தனி சுவையுடன் இருக்கும்.நான் முதல்வராக இருந்தபோது, ராம்தேவ் பாபாவை இங்கு அழைத்து கோயிலைச் சுற்றி ஆயுர்வேத செடிகள் பல நட்டிருந்தோம்.

ஆனால், கடந்த ஆட்சியில், திருமலை திருப்பதி தேவஸ்தான(டிடிடி) பணி நியமனங்கள் சூதாட்டம் போல நடைபெற்றது. கோயில் டிக்கெட்டுகளை தங்கள் விருப்பப்படி விற்றுள்ளனர். தங்களுக்கு நெருக்கமானவர்களை வாரிய உறுப்பினர்களாக நியமித்துள்ளனர். அதில் ஹிந்துக்கள் அல்லாதோருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் ஆதாயங்களுக்காக திருமலை கோயில் தேவஸ்தானத்தை பயன்படுத்தியுள்ளனர்.

அவர்கள்(ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்) கோயிலுக்கென வகுக்கப்பட்டிருந்த விதிகளை தளர்த்தி யார் வேண்டுமானாலும் பொருள்களை வழங்கலாம் என்ற அனுமதியை அளித்தனர். இதன் விளைவாகவே, கலப்படமான நெய் லட்டு தயாரிக்க வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *