கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி!

Dinamani2f2024 08 112f02pnsabc2fpnb.jpg
Spread the love

வட்டி விகிதக் குறைப்பைத் தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கி பல்வேறு திட்டங்களின் கீழ் வீட்டுக் கடன் விகிதத்தை 8.15 சதவிகிதமாக திருத்தியுள்ளது. மார்ச் 31, 2025 வரை முன்கூட்டிய செயலாக்கக் கட்டணங்கள் மற்றும் ஆவணக் கட்டணங்களை முழுமையாக தள்ளுபடி செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் இதன் மூலம் பயனடையலாம் என்றது.

வீட்டுக் கடன் திட்டத்தில் ஆண்டுக்கு 8.15 சதவிகிதம் முதல் வட்டி தொடங்கி ஒரு லட்சத்திற்கு ரூ.744 இஎம்ஐ வசூலிக்கப்படும். மேலும் வாகனக் கடனைப் பொறுத்தவரை, புதிய மற்றும் பயன்படுத்திய கார்களுக்கு, வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.50 சதவிகிதத்திலிருந்து தொடங்கும் நிலையில், இதற்கு ஒரு லட்சத்திற்கு ஆன இஎம்ஐ ரூ.1,240 ஆக வசூலிக்கப்படும் என்றது.

பஞ்சாப் நேஷனல் வங்கி ஆனது ஆண்டுக்கு 8.50% தொடங்கி ஒரு லட்சத்திற்கு ரூ.1,240 ஆரம்ப இஎம்ஐ விகிதத்தில் 0.05 சதவிகிதம் சலுகையை வழங்கும். மேலும் புதிய கட்டணங்கள் பிப்ரவரி 10 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரிசர்வ் வங்கியின் கொள்கை விகித குறைப்புக்கு ஏற்ப வீடு உள்ளிட்ட சில்லறை கடன்களுக்கான வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வைரம் மற்றும் தங்க துறை 8.5% பங்களிக்கும்: அவினாஷ் குப்தா

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *