கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

Dinamani2f2024 11 282fchclv5ha2frain Weather School Girls Pti Edi.jpg
Spread the love

கனமழை எச்சரிக்கையை அடுத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்த்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்றிரவு புயலாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து, நவ. 30 ஆம் தேதி காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ. 29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *