கடலூரை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு முந்திரி வாரியம் அமைப்பு: அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவிப்பு | Tamil Nadu Cashew Board

1376289
Spread the love

சென்னை: தமிழகத்​தில் முந்​திரி உற்​பத்​தியை அதி​கரித்து அந்த தொழிலைமேம்​படுத்த தமிழ்​நாடு முந்​திரி வாரி​யம் அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக அமைச்​சர் எம்​ஆர்​கே.பன்​னீர்செல்​வம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து வேளாண் துறை அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம் வெளி​யிட்ட அறிக்​கை: முந்​திரி உற்​பத்​தியை அதி​கரிக்​க​வும், முந்​திரி​சார் தொழில் நிறு​வனங்​களுக்கு ஊக்​கமளிக்​க​வும், முந்​திரி தொழிலில் ஈடு​பட்​டுள்ள தொழிலா​ளர்​களின் நலன்​களை பாது​காக்​க​வும் ரூ.10 கோடி​யில் தமிழ்​நாடு முந்​திரி வாரி​யம் ஏற்​படுத்​தப்​படும் என்று 2025-26-ம்ஆண்டு வேளாண்மை நிதி​நிலை அறிக்​கை​யில் அறிவிக்​கப்​பட்​டது. அதை செயல்​படுத்​தும் வித​மாக மாநில அளவி​லான முந்​திரி வாரி​யத்தை அமைக்க அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, தமிழ்​நாடு முந்​திரி வாரி​யம் கடலூரை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படும். துறை அமைச்​சர் வாரி​யத்​தின் தலை​வ​ராக​வும், அரசு பிர​தி​நிதி துணைத் தலை​வ​ராக​வும், வேளாண்மை உற்​பத்தி ஆணை​யர் செயல​ராக​வும், துறை அதி​காரி​கள், விவ​சா​யிகள் உள்​ளிட்ட 12 உறுப்​பினர்​கள் கொண்​டதாக இது இருக்​கும். இதுத​விர முந்​திரி வாரிய செயல்​பாடு​களை ஒருங்​கிணைத்து மேற்​கொள்ள வேளாண்மை உற்​பத்தி ஆணை​யர் தலை​மை​யில் நிர்​வாகக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. முந்​திரி உற்​பத்​தி, பதப்​படுத்​துதல், முந்​திரி தொழிலா​ளர்​களின் நலன் காத்​தல் உட்பட பல்​வேறு விவ​காரங்​கள் குறித்து விவா​தித்து முடி​வெடுக்க 3 மாதங்​களுக்கு ஒரு முறை நிர்​வாகக் குழு கூட்​டம் நடத்​தப்​படும்.

இதற்​கிடையே, தமிழகத்​தில் முந்​திரி உற்​பத்​தி, முந்​திரித் தொழிற்​சாலைகளின் தேவையை முழு​மை​யாக பூர்த்தி செய்ய இயலாத நிலை​யில் உள்​ளது. அதனால் ஆப்​பிரிக்க நாடு​களில் இருந்து முந்​திரிக் கொட்​டைகள் இறக்​குமதி செய்​யப்​படு​கிறது.

இந்​நிலையை சீராக்​கும் வித​மாக முந்​திரி உற்​பத்​தி​யில் தன்​னிறைவு அடைவதை நோக்​க​மாகக் கொண்டு தமிழ்​நாடு முந்திரி வாரி​யம் செயல்படும். இதன் மூலம்முந்​திரி சாகுபடி, அறுவடை, மதிப்புக் கூட்​டு​தல் தொடர்​பான புதிய வேலை​வாய்ப்​பு பெரு​கும்.

உழவர்​களின் தேவைக்​கேற்ப அதிக மகசூல் தரும் புதிய ரகங்​கள், இயந்​திர தொழில்​நுட்​பங்​கள், பூச்​சி, நோய் மேலாண்மை குறித்து ஆலோ​சனை​கள் வழங்​குதல், புதிய தொழில்​நுட்​பங்​களை பயன்​படுத்த பயிற்​சி, முந்​திரி பதப்​படுத்​தும் நிலை​யம் அமைத்​தல் தொடர்​பான நிதி​யுதவி மற்​றும் திட்​டங்​கள் குறித்து ஆலோ​சனை வழங்​குதல், முந்​திரிக்​கான சேமிப்பு வசதி​கள், ஏற்​றும​தியை ஊக்​கு​வித்​தல் போன்ற பல்​வேறு பணி​கள் வாரி​யத்​தால் மேற்​கொள்​ளப்​படும். இதன்​மூலம் முந்​திரித் தொழிலில் ஈடு​பட்​டுள்ள அனை​வரும் பயன்​பெறு​வதுடன், முந்​திரித்​ தொழில்​ மேம்​படும்​. இவ்​வாறு அ​தில்​ கூறப்​பட்​டுள்​ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *