கடலூர்: `எங்களால் வெற்றிபெற்றுவிட்டு எங்களுக்கே வாய்ப்பை மறுப்பது நியாயமா?’ – தேமுதிக கூட்டத்தில் பிரேமலதா | In Cuddalore district, Premalatha speech in DMDK meeting about party alliance

Spread the love

ஆனால் தே.மு.தி.க-வுக்கு மட்டும் நீங்கள் வாய்ப்பு கொடுக்க மாட்டீர்கள். இது என்ன நியாயம்? தேர்தல் களத்தில் தே.மு.தி.க-வினரைத் தவிர, உங்கள் கட்சியைச் சேர்ந்த யாரேனும் உழைக்கிறார்களா?

கேப்டன் வலியுறுத்திய கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் எதையும் எதிர்பார்க்காமல், எந்தவித ஆசாபாசங்களுக்கும் அடிபணியாமல், நேர்மையுடன் உழைக்கும் கள வீரர்கள் தே.மு.தி.க தொண்டர்கள் மட்டும்தான். அதை யாராவது மறுக்க முடியுமா?

பணம் கொடுத்தால்தான் உங்கள் கட்சிக்காரர்கள் களத்திற்கு வருவார்கள். ஆனால் தே.மு.தி.க-வைப் பொறுத்தவரை கேப்டனும், அண்ணியாரும் ஒரு முடிவெடுத்து அறிவித்தால் போதும். எங்கள் தொண்டர்கள் வெற்றி வீரர்களாக களத்தில் நிற்பார்கள். இது எங்களுடன் கூட்டணி வைத்து வெற்றிபெற்ற கட்சிகளுக்குத் தெரியும்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா

எங்கள் மாவட்டச் செயலாளர்களுடன், நிர்வாகிகளுடன், தொண்டர்களுடன் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பேசுவேன். இன்று உங்கள் அண்ணியாக, அம்மாவாகச் சொல்கிறேன். உங்கள் ஒப்புதல் இல்லாமல் கூட்டணி குறித்துப் பேச மாட்டேன்.

மாவட்டச் செயலாளர்களுடன் கருத்து பெற்று கூட்டணி முடிவு செய்துள்ளேன். யாருடன் கூட்டணி என முடிவெடுக்கப்பட்டு விட்டது. ஆனால் அதனை இந்த மாநாட்டில் அறிவிக்க வேண்டுமா என்பதுதான் கேள்வி. தமிழகத்தில் எந்தக் கட்சியும் கூட்டணி அறிவிக்காத நிலையில், நாமும் யோசித்து பொறுமையாகத் தெரிவிப்போம்.

தை பிறந்தால் வழி பிறக்கும். சத்ரியனாக வாழ்ந்துவிட்டோம். இனி சாணக்கியனாக வாழ்வோம். மற்ற கட்சிகள் அறிவிக்காத போது நாம் ஏன் முந்திரிக்கொட்டை போன்று அவசரப்பட வேண்டும்?” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *