கடலூர், சிதம்பரம் வழியாக செல்லும் 3 ரயில்கள் ரத்து | 3 Trains Passing through Cuddalore and Chidambaram have been Cancelled

1341856.jpg
Spread the love

கடலூர்: கடலூர் மாவட்டம் கடலூர், சிதம்பரம் வழியாக செல்லும் மூன்று ரயில்கள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் விக்கிரவாண்டி ரயில் நிலையத்திற்கும் இடையே பாலம் எண் 452-ல் கனமழையின் காரணத்தால் அதிக அளவு மழை தண்ணீர் தண்டவாளம் உள்ள பாலத்தின் கீழே செல்வதால் இன்று (டிச.2) கடலூர் சிதம்பரம் வழியாக செல்லும் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் அதிவேக ரயில், சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்லும் சோழன் அதிவேக ரயிலும், கோயம்புத்தூர் இருந்து தாம்பரம் வரை செல்லும் சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் இன்று (டிச.2) சிதம்பரம் ரயில் நிலையத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தியா செல்லும் அதிவிரைவு ரயில் சுமார் 1 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அந்த ரயில் புறப்பட்டுச் சென்றது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *