கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மின்னல் பாய்ந்து 4 பெண்கள் உயிரிழப்பு | 4 women died in lightning strike near Veppur Cuddalore district

Spread the love

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மின்னல் பாய்ந்து 4 பெண்கள் உயிரிழந்தனர். வேப்பூரை அடுத்த கழுதூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் விளை நிலத்தில் மக்காச்சோளத்துக்கு உரம் வைப்பதற்காக அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று மாலை வயலுக்குச் சென்றனர். அப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது.

திடீரென மின்னல் பாய்ந்ததில் உரமிடும் பணியில் ஈடுபட்டிருந்த கழுதூர் கனிதா, பாரிஜாதம், சின்ன பொண்ணு, அரியநாச்சி ராஜேஸ்வரி ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், தவமணி என்பவருக்கு பார்வை பறிபோனது. தகவலறிந்து வந்த போலீஸார் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பார்வையிழந்த தவமணி வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *