தமிழகத்தில் வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜீன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். தற்போது பாராளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் வருகிற 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து வருகிற 6ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை முதலில் அறிவித்து இருந்தது.
வெயில் குறையவில்லை
ஆனால் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. கோடை மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து இருந்த நிலையில் தறபோது வெயில் கொளுத்தி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்ணடி வெயில் வாட்டி வதைகிறது. சென்னையில் 108 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. திருத்தணி, வேலூரில் வெப்பம் தினந்தோறும் அதிகரித்தபடியேதான் உள்ளது.
இதைத்தொடர்ந்து பள்ளிகள் திறப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
10ந்தேதி பள்ளிகள் திறப்பு
இந்தநிலையில் பள்ளிகள் திறப்பு வருகிற 6 ந்தேதிக்கு பதில் 10 ந்தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில் ”தமிழ்நாட்டில் நிலவும் கடும் வெப்ப அலையின் காரணமாக அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் ஜூன் 9ஆம் தேதி வரையில் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் அனைத்துவகைப் ப ள்ளிகளும் ஜூன் 10ம் தேதி திங்கள் கிழமை அன்று திறக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிதனது சமூக வலைதள பக்கத்தில் “வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் மாணவர்களின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் ஆணைக்கிணங்க ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்“ என்று தெரிவித்து உள்ளார்.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஏற்கனவே அறிவித்ததை விட மேலும் 4 நாட்கள் கிடைத்து இருப்பதால் மாணவ&மாணவிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.