கடைசி டி20: இலங்கைக்கு 138 ரன்கள் இலக்கு; ஆறுதல் வெற்றி பெறுமா?

Dinamani2f2024 072fa2aa490c F1be 43e0 9cbc 91b732651fe72findia.jpg
Spread the love

இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 30) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய சஞ்சு சாம்சன் (0 ரன்), ரிங்கு சிங் (ஒரு ரன்), சூர்யகுமார் யாதவ் (8 ரன்கள்) மற்றும் ஷிவம் துபே (13 ரன்கள்) எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதன்மூலம், இந்திய அணி 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் 37 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ரியான் பராக் 18 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தும், வாஷிங்டன் சுந்தர் 18 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் மஹீஷ் தீக்‌ஷனா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும், சமிந்து விக்கிரமசிங்க, அஷிதா ஃபெர்னாண்டோ மற்றும் மெண்டிஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *