12.04.2018 அன்று இரவு ராமர் மற்றும் அவரது மனைவி வேல்மதிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமர், வேல்மதியை தையல் மிஷினில் உள்ள பெல்ட்டால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.மனோஜ்குமார், மனைவியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்த ராமருக்கு ஆயுள் தண்டனையும், ₹10,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பு கூறினார். மேலும் அபராதத் தொகை செலுத்தத் தவறினால், கூடுதலாக ஆறு மாத சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
கடையநல்லூர்: தையல் மெஷின் பெல்ட்டால் மனைவியைக் கொன்ற நபர்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்! | Kadayanallur: Husband sentenced to life imprisonment for murdering wife with sewing machine belt.