கோபிசெட்டிபாளையம்,நவ.1-
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் இன்று(1ந்தேதி) நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
இந்த இயக்கத்துக்காக இரவு, பகல் பாராமல் என் பயணங்களை சிறந்து முறையில், தடம் புறலாமல் சலனத்துக்காக இடம் மாறாமல் என் பணியை ஆற்றி இருக்கறேன்.இதனை புரட்சிதலைவியே திருச்சியிலும், எனது திருமணத்தின்போது சொல்லி இருக்கிறார். புரட்சித்தலைவியின் மறைவுக்கு பிறகு இந்த இயக்கம் உடைந்து விடக்கூடாது, வலிமையோடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைவருடன் சேர்ந்து பணியாற்றி உள்ளேன். 2 முறை வாய்ப்பு வந்த போது அந்த வாய்ப்பை நான் விட்டுக்கொடுத்து உள்ளேன்.புரட்சித்தலைவி மறைவுக்கு பிறகு சசிகலா அனைவரையும் அழைத்து பேசி இயக்கத்தை வழிநடத்த அனைவரது கருத்தையும்கேட்டார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னரே கட்சிக்கு வந்தவன் நான்.அவர் பொறுப்பேற்ற பின்னர் கட்சி எந்த வெற்றியையும் பெறவில்லை. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு வெளியே சென்றவர்கள், மனவேதனையோடு தங்களது பணிகளை ஆற்றாமல் இருப்பவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று 6 பேர் சென்று எடப்பாடியிடம் சொன்னோம். சோர்வோடு இருக்கிற தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்து செல்லவேண்டும் என்று பின்னரும் வலியுறுத்தினேன். என்னுடன் வந்தவர்கள் பெயர்களை சொல்ல விரும்பவில்லை.

இந்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற நிலையில் தான் 5-ந்தேதி மனம்திறந்து பேசினேன். தொண்டர்கள் கருத்தை யாராவது ஒருவர் வெளிப்படுத்த வேண்டும் என்பதால்தான் அன்று கூறினேன்.2026&க்கு பிறகு நாம் வெற்றி பெறவில்லை என்றால் இதற்கு யார் காரணம், இந்த கருத்தை என் யாராவது சொல்லவில்லை என்று கேட்பார்கள். வெற்றி என்ற இலக்கை எட்ட வேண்டும் என்று கூறினேன். அன்று 10 நாட்களில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றுதான் கூறினேன். கெடு விதிக்கவில்லை. இதன¬ ஊடகம் தவறாக புரிந்து கொண்டது.
இயக்கம் ஒன்றுசேர வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் தொண்டர்களின் உணர்வுகளை தெரிந்து கொண்டு கூறினேன். 2024 பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி ஏற்பட்டு உள்ளது. 10 இடங்களில் 3&வது இடம்,2 தொகுதியில் 4&வது இடம். இயக்கத்தை எப்படி வழிநடத்த வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் அந்த கருத்து பரிமாறப்பட்டது.
மீண்டும் அ.தி.மு.க.புத்துயிர் பெற்று தமிழகத்தில் ஆட்சி நடைபெற வேண்டும். கன்னியாகுமரி இடைத்தேர்தலில் 5 ஆயிரத்து 126 வாக்குகள்தான் பெற்றோம். எனவே சட்டமன்றதேர்தலில் என்ன நிலை என்பதை உணர்ந்துதான் இந்த கருத்துக்களை வெளிப்படுத்தினேன். தேவர் ஜெயந்திக்கு சென்ற போது அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் அனைவருடன் பேசினேன். தேவர் ஜெயந்திக்கு சென்ற பரிசுதான் நான் இன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளேன்.
நான் நீக்கப்பட்டவர்களோடு பேசியது உண்மைதான். நீங்களும் ஒத்துழைப்பு தந்து கட்சியை வலிமை படுத்த வேண்டும் என்று கூறினேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி கூறும்போது நான் தி.மு.க.வுடன் உறுது¬ணாயாக இருப்பதாகவும் பி டீம் என்றும் கருத்து தெரிவிதது உள்ளார். பி டீம் யார் என்பதை நாடு அறியும். கொடநாடு கொலை வழக்கில் ஏன் தி.மு.க.வுக்கு குரல் கொடுக்கவில்லை என்பதுதான் தொண்டர்களின் கருத்தாக உள்ளது.நான் பி டீமில் இல்லை.அவர்தான் ஏ1 இல் இருக்கிறார்.

இன்று வரை அவர் மீது தி.மு.க.என்ன செய்து கொண்டு இருக்கிறது என்பது சட்டமன்றத்தில் தெரியும். சட்டமன்ற வரலாற்றில் துணை தலைவராக ஓ.பி.எஸ்.சை நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி கொடுத்தபோது முதல் அமைச்சரே எழுந்து இற்கான கருத்துக்களை சபாநாயரிடம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். பின்னர் பத்தே நிமிடத்தில் அதனை அறிவித்தார் என்பது நாடு அறியும். என்னை இயக்கத்தில் இருந்து நீக்கி இருப்பதை நினைத்து மனவேதனை அடைகிறேன்.வருத்தப்படுகிறேன்.கண்ணீர் சிந்துகிறேன். இயக்கத்துக்காக 53 ஆண்டுகள் அர்ப்பணித்தவன். தலைவர் காலத்திலேயே 1972&ம் ஆண்டில் செயலாளராக இருந்து பணியாற்றியவன். அப்படிப்பட்ட எனக்கு இதுபோன்ற தீர்ப்பு என்பது உண்மையில் மனவேதனை அளிக்கிறது. இதனை நி¬னைத்து இரவு தூங்கவில்லை. எடப்பாடி பொறுப்புக்கு வருவதற்கு முன்பே புரட்சிதலைவரால் சட்டமன்ற உறுப்பினராக, மாவட்ட செயலாளராக பல்வேறு பொறுப்புகளை வகித்து உள்ளேன். இவர் 1989&ல் தான் இடம் பெறுகிறார்.
9 முறை சட்ட மன்ற உறுப்பினர், சீனியரான எனக்கு கடிதம் அனுப்பி விளக்கம்கேட்டு இருக்க வேண்டும். அதுதான் கட்சி அடிப்படை விதியில் உள்ளது. ஆனால் அவர் சர்வாதிகார போக்கில் யாரைவேண்டுமானாலும் தூக்கி எறியலாம் என்று உருவாக்கி இருப்பது வேதனை அளிக்கிறது. புரட்சி தலைவர் 1975&ம் ஆண்டு இறுதியில் கொண்டு வந்த விதியில் கழக தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்யவேண்டும். இதை யாரும் மாற்றம் செய்ய கூடாது என்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தொண்டர்கள் உணர்வைதான் வெளிப்படுத்திய என்மீது களங்கம் ஏற்படுத்தி கட்சியில் இருந்து நீக்கி இருப்பது வேதனைக்குறியது. அந்தியூர் தொகுதி தேர்தலில் துரோகம் செய்து விட்டார் என்று குறிப்பிட்டார்.அப்போது நான் கட்சி பொறுப்பில் இல்லை. 1989&ம் ஆண்டு நான் மாவட்ட செயலாளராக இருந்த போது சேவல்புறா சின்னத்தில் அந்தியூரில் வெற்றிபெற்றோம்.
குற்றம் சாட்டுவதற்று முன்பு அதனை செய்தவர் யார், அதற்கு உறுதுணையாக இருந்தவர்யார் என்பதை அறிந்து பேசி இருக்க வேண்டும். குற்றம்செய்தவருக்கே பொறுப்புகள் கொடுத்து அருகில் வைத்து கொண்டு நிலை என்பது எல்லோரும் அறிவார்கள்.
அன்றைய பொதுச்செயலாளராக இருந்த சின்னம்மா அவர்களிடம் பதவி பெறும்போது எப்படி பெற்றார் என்பது நாடு அறியும். அதன்பிறகு டி.டி.வி.தினகரனோடு 18 எம்எல்ஏக்கள் முழு ஆதரவு தந்தஅடிப்படையில் தான் பிறகு 122 உறுப்பினர்களோடு வலம் வந்தோம். அவர் வாபஸ்பெற்ற பின்னர் ஓ.பி.எஸ்.,11 பேரை அழைத்து எங்களோடு இருங்கள், என்னோடு பயணியுங்கள், உங்களுக்கு அனைத்து பதவியும் தருவதாக கூறினார். அதன்பிற்கு ஒருங்கிணைப்பாபளர், இணை ஒருங்கிணைப்பாளராக ஏற்றுக்கொண்டு பணிகளை மேற்கொண்டார்.அவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை, கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
இந்த இயக்கத்தை 4 ஆண்டுகாலம் கட்டிப்பிடித்து காப்பாற்றிய பா.ஜனதா கட்சிக்கு நாம் என்ன உதவி செய்தோம்.2024&ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது தமிழத்தில் ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தினார். 2024 மட்டும் அல்ல 2026, 2029- ஆண்டிலும் பா.ஜனதாவுடன் கூட்டணியில் இல்லை என்று எடப்பாடி கூறினார். இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பேசுகிறார்.
இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால் நாம் பொறுப்பில் இருக்கும்போது கழகத்தை பற்றி விமர்சனம் செய்ய இயலாது.

என்னை கட்சி உறுப்பினரில் இருந்து நீக்கினாலும் கூட கட்சியின் விதியின் அடிப்படையில் என்னை நீக்கவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பேன். தொடர்ந்து நான் இந்த கட்சியில் இயங்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.நீக்குவதற்கு என்ன காரணம் அதற்கான விதிகள் உள்ளதா என்பதை வழக்கறிஞருடன் கலந்து முடிவு செய்யப்படும்.
துரோகம் என்று சொன்னாலே நோபல் பரிசு கொடுக்கவேண்டியது எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான். ஏன் என்றால் அவர் தி.மு.க.வ¬ பார்த்து அடிக்கடி பொய்சொல்வதற்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்பார். எல்லோருக்கும் துரோகம் செய்த எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான் நோபால் பரிசு கொடுக்க முடியும். வேறு யாருக்கும் கொடுக்க இயலாது.
எடப்பாடி பழனிச்சாமி தற்காலிக பொதுச்செயலாளர்தான். நிரந்தர பொதுச்செயலாளர் என்று இதுவரையில் தேர்தல் ஆணையம் தெரிவிக்க வில்லை. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. தற்காலிக பொதுச்செயலாளர், 53 ஆண்டு காலம் கட்சியில் இருந்து என்னை நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர உள்ளேன். தமிழக அரசியல் கட்சிகளில் புரட்சி தலைவரை விட செல்வாக்கு மிக்கவர்கள் யாரும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.