கட்டுப்பாட்டை இழந்து, 8 பேர் உயிரை காவு வாங்கிய அரசு பேருந்து; சேலத்தை உலுக்கிய சோகம்- என்ன நடந்தது?

Spread the love

கோவையில் இருந்து இன்று காலை பயணிகளுடன் சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து,‌ உத்தம சோழபுரம் அருகில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியிருக்கிறது. எதிரில் வந்த இருசக்கர வாகனம் மற்றும் பயணிகளை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் மீது அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்தி, அருகில் உள்ள சாலை தடுப்பு மீது மோதி நின்றிருக்கிறது.

சேலம் வாகன விபத்து

சேலம் வாகன விபத்து

கட்டுப்பாட்டை இழந்த அந்த அரசுப் பேருந்து ஏற்படுத்திய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாய், மகன் மற்றும் சரக்கு வாகனத்தில் சென்ற பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 6 பேர் என மொத்தம் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காயங்களுடன் உயிர் தப்பிய 4 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *