கணக்குப் போடும் காங்கிரஸ்… காத்திருக்கும் தவெக! | expectations that Congress will alliance with tvk party explained

Spread the love

ஆட்​சி​யில் பங்கு வேண்​டும் என தமிழக காங்​கிரஸ் தலை​வர்​கள் கேட்​டுக் கொண்​டிருக்​கும் நிலை​யில், அதைச் சாதித்​துக் கொள்வதற்​காக காங்​கிரஸ் கட்சி தவெக-வுடன் கூட்​டணி சேருமா என்ற எதிர்​பார்ப்​பும் நிலவி வரு​கிறது. இருப்​பினும் பிஹார் தேர்​தல் முடிவு​களை ஒட்​டியே தமி​ழ​கத்​தில் கட்​சி​களின் கணக்​கு​கள் மாறும் என அரசி​யல் பார்​வை​யாளர்​கள் தெரிவிக்​கி​றார்​கள்.

கட்சி தொடங்கி இன்​னும் ஒரு தேர்​தலை கூட சந்​திக்​காத தவெக-வுடன் கூட்​டணி வைக்க, முக்​கிய கட்​சிகள் பலவும் முண்​டியடிக்​கும் நிலை​யில், அக்​கட்​சி, தனது தலை​மை​யில் கூட்​ட​ணிக்கு சம்​ம​திப்​பவர்​கள் தாராள​மாக வரலாம் என நிபந்​தனை வைத்​துக் காத்​திருக்​கிறது. தவெக-​வின் தலை​மை​யில் ஒரு புதிய கூட்​டணி அமைந்​தால், அந்த அணிக்​கும் திமுக-வுக்​கும் இடையே தான் போட்டி என்று விஜய்​யைப் போலவே டிடி​வி.​தினகரன் சொன்​னாலும், அவருக்கு தவெக-​வின் கதவு​கள் இன்​ன​மும் திறந்​த​பாடில்​லை.

அதே​போல, “கூட்​ட​ணிக்கு பிள்​ளை​யார் சுழி போட்​டாச்​சு” என தனது கூட்​டத்​தில் தவெக கொடிகளைப் பார்த்​து​விட்டு பழனி​சாமி பரவசப்​பட்ட போதி​லும், கூட்​டணி விஷ​யத்​தில் தங்​களின் முந்​தைய நிலைப்​பாட்​டில் எவ்​வித மாற்​ற​மும் இல்லை என்று திட்​ட​வட்டமாகச் சொல்​லி​விட்​டது தவெக பொதுக்​குழு. இப்​படி வலிய வந்து நீளும் கூட்​டணி கரங்​களை புறந்​தள்​ளும் விஜய், 2026 தேர்​தலை சந்​திக்க என்​ன​தான் திட்​டம் வைத்​திருக்​கி​றார்? தனது தலை​மை​யில் போட்​டி, அதில் தன்னை முதல்​வ​ராக ஏற்​றுக் கொள்​ளும் கட்​சிகளை இணைத்​துக்​கொள்​வது என்​பது​தான் அவரது திட்​டம். அதில் அவர் முதல் இடத்​தில் வைத்​திருப்​பது காங்​கிரஸைத் தான்.

பாஜக தனது கொள்கை எதிரி என்று அறி​வித்​து​விட்ட நிலை​யில், மற்​றொரு பிர​தான தேசிய கட்​சி​யான காங்​கிரஸ் உடன் கூட்​டணி வைத்​துக் கொள்ள வேண்​டும் என்​பது விஜய்​யின் நோக்​க​மாக இருக்​கிறது. தனக்​குள் அரசி​யல் ஆசை துளிர்​விட தொடங்​கிய வேகத்​திலேயே டெல்லி சென்று காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தியை சந்​தித்​து​விட்டு வந்​தவர் விஜய்.

அந்த நெருக்​கம் இன்​ன​மும் தொடர்​வதை, கரூர் கூட்ட நெரிசல் சம்​பவத்​தின் போது விஜய்யை ராகுல் காந்தி தொடர்பு கொண்டு பேசி​யதன் மூலம் தெரிந்து கொள்ள முடிந்​தது. இப்​படி இரண்டு தரப்​பும் ஒரு​வ​ருக்கொரு​வர் அனுசரணை​யாக இருக்​கும் நிலை​யில், இரண்டு கட்​சிகளும் கூட்​டணி வைத்​தால் குறைந்​தது 175 இடங்​களில் வெற்றி நிச்​ச​யம் என விஜய் தரப்​பில் இருந்து காங்​கிரஸுக்கு எடுத்​துச் சொல்​லப்​படு​கிற​தாம்.

மேலும், தமிழக காங்​கிரஸ் தலை​வர்​கள் பலரும் தவெக உடன் கூட்​டணி வைத்​தால் நமக்கு கிட்​டத்​தட்ட 100 இடங்​களில் போட்​டி​யிட வாய்ப்பு கிடைக்​கும் என்று தலை​மைக்கு தபால் அனுப்​பு​கி​றார்​கள். அப்​படி வாய்ப்​புக் கிடைத்​தால் கட்சி பழையபடி புது வேகம் எடுக்​கும் என்​பது அவர்​களது கணிப்​பாக இருக்​கிறது. ஆனால், திமுக கூட்​ட​ணியை விட்டு வெளி​யேற காங்​கிரஸுக்கு தயக்​க​மும் இருக்​கிறது.

கருணாநிதி காலத்​தில் இருந்து தொடரும் சுமுக உறவு, ராகுல் காந்​தியை பிரதமர் வேட்​பாள​ராக முதல் ஆளாக முன்​மொழிந்த ஸ்டா​லின், தமி​ழ​கத்​தில் குறிப்​பிடத் தகுந்த மக்​களவை இடம் இவற்​றையெல்​லாம் நினைத்து காங்​கிரஸ் தரப்​பில் தயக்​கம் காட்​டப்​படு​கிறது. அதேசம​யம், இந்த விஷ​யத்​தில் பிஹார் தேர்​தல் முடிவுக்கு பிறகு ஒரு முடிவு எடுத்​துக் கொள்​ளலாம் என்று நினைக்​கும் காங்​கிரஸ், “இப்​போதைக்கு கூட்​டணி பற்றி யாரும் பொது​வெளி​யில் எதை​யும் பேசவேண்​டாம்” என கட்​சி​யினருக்கு வாய்ப்​பூட்​டுப் போட்​டிருக்​கிறது.

பிஹாரில் பாஜக – ஐக்​கிய ஜனதா தளம் கூட்​டணி வெற்றி பெற்று மீண்​டும் தான் முதல்​வ​ராக தேர்ந்​தெடுக்​கப்​ப​டா​விட்​டால் நிதிஷ் குமார் கூட்​ட​ணியை விட்டு வெளி​யேறி மத்​திய அரசுக்​கான ஆதரவை விலக்​கிக் கொள்​வார் என காங்​கிரஸ் கணக்​குப் போடு​கிறது. அப்​போது மத்​திய ஆட்​சியை கவிழ்ப்​ப​தற்​கான முயற்சி நடந்​தால் மக்​களவை​யில் 22 எம்​பி-க்​களை வைத்​திருக்​கும் திமுக-​வின் தயவு பாஜக-வுக்கு தேவைப்​படலாம். அந்த சமயத்​தில் திமுக கூட்​ட​ணி​யில் இருப்​பதே நல்​லது என காங்​கிரஸ் கருதுகிறது.

ஒரு​வேளை, அங்கு காங்​கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்​டணி வெற்றி பெற்​று​விட்​டால், அப்​போது தவெக-வுடன் கூட்​டணி வைக்க காங்​கிரஸ் முன்​வரலாம் என்​கி​றார்​கள். இந்த கணக்கு விஜய்க்​கும் எடுத்து சொல்​லப்​பட்​டிருப்​ப​தால் கூட்​டணி விஷ​யத்தை சற்றே ஆறப்​போட்டு வைத்​திருக்​கிறது தவெக. காங்​கிரஸ் வரவைப் பொறுத்து மற்ற கட்​சிகளை இணைத்​துக்​கொள்​ளலாம் என்​பது தவெக-​வின் கணக்​கு. அப்​போது திமுக கூட்​ட​ணி​யில் உள்ள வேறு சில​கட்​சிகளை​யும் தங்​களு​டன் இணைக்க தவெக முயற்​சிக்​கலாம். ஆக, தமி​ழ​கத்​தின் கூட்​டணி கணக்​கு​களை பிஹாரின் தேர்​தல் முடிவு​களும் திருத்தி எழுதலாம் என்​பதே இப்​போதைய நிலை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *