மரகத நாணயம் 2 ஆம் பாகத்தில் நடிகர் ஆதியின் மனைவி நிக்கி கல்ராணியும் நடிக்கவிருப்பதாக நடிகர் ஆதி கூறியுள்ளார்.
நடிகர் ஆதியின் நடிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கியுள்ள சப்தம் திரைப்படம் வருகிற 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் மரகத நாணயம் படத்தின் 2 ஆம் பாகத்தின் அப்டேட்டையும் நடிகர் ஆதி பகிர்ந்தார்.
செய்தியாளர்களுடன் நடிகர் ஆதி பேசியதாவது, மரகத நாணயம் 2 படத்தின் பணிகள் விரைவில் தொடங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்துக் கொண்டிருக்கின்றன. படத்தின் முதல் பாகத்தின் குழுவினருடன் இன்னும் பெரிய குழுவினரும் இணைந்திருக்கிறார்கள்.
முதல் பாகத்தின் கதை சிறியதாக இருந்தது; ஆனால், இரண்டாம் பாகத்தின் கதை பெரியதாக இருக்கும். கண்டிப்பாக மரகத நாணயம் நல்ல படமாக வெளிவரும்’’ என்று கூறினார். அதுமட்டுமின்றி, மரகத நாணயம் 2 ஆம் பாகத்தில் அவரது மனைவி நிக்கி கல்ராணி நடிப்பதுடன், மற்றொரு முன்னணி நடிகையும் நடிக்கவிருப்பதாகக் கூறினார்.