கண்ணீருடன் தொடங்கிய மெஸ்ஸி 2 கோல்கள்: ஆர்ஜென்டீனா அபார வெற்றி!

dinamani2F2025 09
Spread the love

சொந்த மண்ணில் கடைசி போட்டியில் லியோனல் மெஸ்ஸி அசத்தலாக 2 கோல்கள் அடித்தார்.

உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் கடைசிக்கு முந்தையை ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா 3-0 என வென்றது.

தன்னுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனாவின் அணியும் வெனிசுலாவும் மோதின.

இந்தப் போட்டியில் மெஸ்ஸி 39, 80-ஆவது போட்டியில் கோல் அடித்து அசத்தினார். ஜூலியன் அல்வாரஸ் இந்த இரண்டு கோல் அடிக்கவும் துணைப் புரிந்தார்.

இது சொந்த மண்ணில் கடைசி போட்டியாக இருக்கும் என்பதால் போட்டிக்கு முன்பாக பயிற்சியின்போது மெஸ்ஸி கண்ணீருடன் இருந்தார்.

இறுதியில் 3-0 என வென்றதும் அனைத்து ரசிகர்களும் மெஸ்ஸிக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்கள்.

இந்தப் போட்டியில் ஆர்ஜென்டீனா 77 சதவிகித பந்தினை தன் வசம் வைத்திருந்தார்கள்.

புள்ளிப் பட்டியலில் 38 புள்ளிகளுடன் யாரும் நெருங்க முடியாத அளவுக்கு முதலிடத்தில் இருக்கிறது.

முதல்முறையாக உலகக் கோப்பைக்குத் தேர்வாக முயற்சிக்கும் வெனிசுலா 18 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் இருக்கிறது.

டாப் 6 அணிகள் மட்டுமே உலகக் கோப்பைக்குத் தேர்வாகும். இதன் கடைசி போட்டியில் கொலம்பியா அணியுடன் செப்.10ஆம் தேதி மோதுகிறது.

Lionel Messi made sure he had good memories of playing a home qualifier with Argentina’s national team for the last time in his illustrious career.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *