இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் மம்மூட்டியை வைத்து அடுத்த படம் எடுக்க இருப்பதை உறுதி செய்திருக்கிறார்.
மலையாளத் திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன்.
இவர் இயக்கிய “அனந்தரம்’, ‘மதிலுகள்’, ‘விதேயன்’ ஆகிய திரைப்படங்களில் நடிகர் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

அடூர் கோபாலகிருஷ்ணன் – மம்மூட்டி கூட்டணி 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைய உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இதனை அடூர் கோபாலகிருஷ்ணன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இது தொடர்பாக மலையாள ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கும் அடூர் கோபாலகிருஷ்ணன், “என்னுடைய அடுத்தப் படத்தில் மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.