கனடாவின் புதிய பிரதமராகிறார் மார்க் கார்னி!

Dinamani2f2025 03 102fm8leo0ht2fglozwdxiaei9r6.jpg
Spread the love

லிபரல் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ட்ரூடோவுக்குப் பிறகு புதிய பிரதமராகவும், அக்கட்சியின் தலைவராகவும் மார்க் பதவியேற்கவிருக்கிறார்.

யார் இந்த மார்க் கார்னி?

மார்க் கார்னி 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராகப் பணியாற்றியுள்ளார். 2011 முதல் 2018 ஆம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

தலைமைப் பதவிக்கான போட்டியில் மார்க் கார்னி 1,31,674 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் சுமார் 85.9 சதவிகித வாக்குகளாகும்.

அவரை எதிர்த்து போட்டிட்டவர்களான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் 11,134 வாக்குகளையும், கரினா கோல்ட் 4,785 வாக்குகளையும், பிராங்க் பேலிஸ் 4,038 வாக்குகளையும் பெற்றிருந்தது குறிப்பிட்டத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *