இறக்குமதி செய்யப்படும் கனடா பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் உறுதியளித்துள்ளார். இது கனடாவின் பொருளாதாரத்தை கணிசமாக பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அவரது கடிதத்தில், ஃப்ரீலேண்ட் ‘டிரம்பின் அச்சுறுத்தலை மிகப்பெரிய சவால்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
துணைப் பிரதமராக பதவி வகித்துவந்த ஃப்ரீலேண்ட், நீண்ட காலமாக ட்ரூடோவின் லிபரல் கட்சியில் மிக முக்கியமான ஒருவராக இருந்து வருகிறார். அவர் 2020 ஆம் ஆண்டு முதல் கனடாவின் நிதி அமைச்சராகவும் இருந்து வருகிறார்.
முன்னாள் நிதியமைச்சராக இருந்த பில் மோர்னோ அரசின் செலவினக் கொள்கைகள் தொடர்பாக ட்ரூடோவுடனான சர்ச்சையின் மத்தியில் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
ஃபிரீலேண்ட் கனடா நாடாளுமன்றத்தில் லிபரல் உறுப்பினராகத் தொடர்ந்து இருக்க விரும்புவதாகவும், கனடாவின் வரவிருக்கும் தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.