இந்த நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜிநாமா செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ள லிபரல் கட்சியைச் சேர்ந்த எம்.பி. சீன் கேஸே, “கனடா மக்கள் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக விரும்புகிறார்கள்” என்றும் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடா தலைமையில் லிபரல் கட்சினரிடையே உள்கட்சி பூசல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த வாரம், லிபரல் கட்சி எம்.பி.க்கள் பெரும்பாலானோர் ஒன்றுகூடி முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அவற்றில் குறிப்பாக, இந்தியாவுடனான உறவுகள் குறித்தும், லிபரல் கட்சியின் செல்வாக்கு நிறைந்த பகுதியாக கருதப்பட்ட டோரண்டோ செயிண்ட் பாலில், கடந்த ஜூனில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அக்கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது குறித்தும் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.