“தன் கையே கண்ணைக் குத்திய கதை போலத் தான் தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.
உலக நாடுகளைத் தனக்குப் பணிய வைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையிலெடுத்த அஸ்திரம் ‘வரி’.
இதற்கு ட்ரம்பின் 51-வது அமெரிக்க நாடான கனடா மட்டும் விதிவிலக்கு ஆகுமா என்ன?
ஆம்… கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் கனடாப் பொருள்களுக்கு 35 சதவிகித வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த அதிக வரிக்கு ட்ரம்ப் சொன்ன காரணம் – ஃபென்டனைல் போதைப் பொருளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது.

அடுத்ததாக, சீனா – கனடா முன்பு அவர்களுக்குள் இருந்த வர்த்தக பிணக்குகளை மாற்றி, சமரச ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுக்கொண்டன.
ஆனால், ட்ரம்ப்போ, ‘சீனா உடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைப் போடுகிறது. இது நடந்தால் கனடா மீது 100 சதவிகித வரி விதிக்கப்படும்’ என்று எச்சரித்திருந்தார்.
ஆனால், ட்ரம்பின் இந்தக் கூற்றிற்கு கனடாவின் பிரதமர் கார்னி, “சீனா உடன் எந்த ஒப்பந்தத்தையும் நாங்கள் போடவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள அதிக வரி, வர்த்தக தடைகள் குறித்து தான் பேசியிருக்கிறோம்” என்று நாசூக்காக பேக் அடிக்க, 100 சதவிகித வரியில் இருந்து தப்பித்தது கனடா.