கனமழையால் பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தரைப்பாலங்கள் மூழ்கின | Heavy rains cause flooding in Kosasthalai river in Pallipattu Overpasses submerged

1379308
Spread the love

திருவள்ளூர்: கனமழையால் பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும், பள்ளிப்பட்டை ஒட்டியுள்ள ஆந்திர மாநிலப் பகுதிகளில் உள்ள மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இதனால் பள்ளிப்பட்டு அருகில் உள்ள லவா, குசா ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த நீரானது பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் கலந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் சாமந்தவாடா, நெடியம், கீழ்கால்பட்டறை தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின. அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் வருவாய்த்துறையினரும், காவல் துறையினரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *