கடலோரப் பகுதியில் தொடர்ந்து பலத்த காற்று , அதீத அலைகள் இருப்பதால், மூன்று கடலோர மாவட்டங்களிலும் உள்ள மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
உடுப்பி மாவட்டத்தில், பலத்த மழையால் சில உள் கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மல்நாடு பகுதியில் உள்ள சிக்கமகளூரு மற்றும் சிவமோகா மாவட்டங்களில் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடகு மாவட்டத்திலும் பலத்த மழை பெய்ததால், நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், உயிரிழப்புகளைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.