கனமழையால் மண் சரிவு! பாதி வழியில் திருப்பி அனுப்பப்பட்ட மலை ரயில்!

Dinamani2f2024 082f52c1dee7 Ad36 4cce 8c4d Fe0b9563d3a02fnilagiri.jpg
Spread the love

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், மலை ரயில் சேவை இன்று(ஆக. 1) ஒரு நாள் ரத்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கும், அதேபோல் உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது.

இந்த மண் சரிவால் ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன. மரங்கள் சாய்ந்து ரயில் பாதையின் குறுக்கே விழுந்தன. இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இன்று காலை வழக்கம் போல்காலை 7. 10 மணிக்கு புறப்பட்டு சென்ற மலை ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்வதாக சேலம் ரயில்வே கோட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் ரயில் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *