கனமழை எச்சரிக்கை: முன்னேற்பாடுகள் தயார்! -அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

Dinamani2fimport2f20212f62f92foriginal2fecho Of Heavy Rains In Maharashtra Orange Warning For.jpeg
Spread the love

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 23-ஆம் தேதி, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, அடுத்த 2 நாள்களில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெருமழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ராமேசுவரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 300 மி.மீ.-க்கும் மேல் மழை பெய்துள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருடன் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் காணொலி வழியாக ஆலோசனை நடத்தினார்.

“தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 15 குழுக்களும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 15 குழுக்களும் தயாராக இருப்பதாகவும், மிக கனமழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *