கனமழை: கோவை அருகே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு | Heavy Rain: Tree Falls on Road near Coimbatore, Disrupting Traffic

1363040
Spread the love

மேட்டுப்பாளையம்: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதனிடையே, கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில், முதலாம் கொண்டை ஊசி வளைவு அருகே, சாலையோரம் இருந்த மரம் (மே 26) இன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மேட்டுப்பாளையம் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று இயந்திரங் களை பயன்படுத்தி, சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *