தஞ்சாவூர் : கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் திருத்தேரோட்டம் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் திருக்காா்த்திகை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு இந்த விழா திருக்காா்த்திகை நாளான வெள்ளிக்கிழமை(டிச.13) நடைபெற இருந்தது. இதற்காக தேர் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது.