நீலகிரியில் கனமழை எச்சரிக்கையால் பைன் ஃபாரஸ்ட், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அடுத்த இரு நாள்கள் (மே 25, 26) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பைன் ஃபாரஸ்ட், தொட்டபெட்டா ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 நாள்கள் மலையேற்ற சவாரியும் நிறுத்தம் செய்யப்படுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்திலும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன?