கனிமவள ஆய்வு திட்டங்கள்: நிதியுதவி குறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்த கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல் | UGC instructs colleges to inform students about funding for mineral exploration projects

1330024.jpg
Spread the love

சென்னை:மத்திய கனிமவளத் துறை முன்னெடுத்துள்ள ஆய்வுத் திட்ட முன்மொழிவு, நிதியுதவி குறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்துமாறு கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி வெளியிட்டுள்ள அறிவிப்பு: மத்திய கனிமவள அமைச்சகம் ஆண்டுதோறும் அறிவியல், தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ் கல்வி சார்ந்த நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், தேசிய கல்வி நிறுவனங்களின் திட்ட முன்மொழிவுகளுக்கு (புராஜெக்ட்) நிதியுதவி வழங்கி வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்படும் முன்மொழிவுகள் அமைச்சகத்தின் அறிவியல் ஆலோசனை நிலைக்குழு சார்பில் உரிய முறையில் மதிப்பீடு, ஆய்வு செய்யப்படும். இது குறித்து உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தொடர்ந்து, கனிமவள அமைச்சகத்தின் சத்யபாமா போர்டலில் நவ.15 ஆம் தேதி வரை திட்டத்துக்கான முன்மொழிகளைச் சமர்ப்பிக்கலாம். இது குறித்த கூடுதல் தகவல்கள் அந்தத் தளத்தில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *