கபில்தேவ், ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனையை முறியடித்த ஜடேஜா!

Dinamani2f2025 02 062fpf61raly2fgjgasnza4aa5kv7.jpg
Spread the love

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி மகராஷ்டிரத்தின் நாக்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா இருவரும் முறையே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து இடையேயான இருதரப்பு ஒருநாள் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா, முன்னாள் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனை முந்தி முதலிடத்தையும் பிடித்துள்ளார்.

இதையும் படிக்க | லாகூர் கடாபி திடல் புதுப்பிக்கும் பணிகள் நிறைவு! -பாக். கிரிக்கெட் வாரியம்

2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அறிமுகமானதிலிருந்து, அவர் 198 போட்டிகளில் 35.85 சராசரியுடன் 222 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் இருதரப்பு போட்டிகளில் மொத்தமாக 42 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 31 போட்டிகளில் 40 விக்கெட்டுகளும், ஆண்ட்ரூ பிளின்டாஃப் 37 விக்கெட்டுகளும், ஹர்பஜன் சிங் 36 விக்கெட்டுகளும், ஜவகல் ஸ்ரீநாத் / ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் 35 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

மேலும், ஒரு சாதனையாக ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளையும் எட்டி, இந்த மைல்கல்லை எட்டிய ஆறாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

கபில்தேவுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் 6000 ரன்கள் மற்றும் 600 விக்கெட்டுகளை எடுத்த 2-வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

இதையும் படிக்க |ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் கொங்கடி த்ரிஷா!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *