கமுதி அருகே பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா | Muthuramalinga Thevar Guru Puja festival today at Pasumpon near Kamudi

1381435
Spread the love

ராமநாதபுரம்: க​முதி அருகே பசும்​பொன்​னில் இன்று நடை​பெறும் முத்​து​ராமலிங்​கத் தேவரின் குருபூஜை விழா​வில் குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன், தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி மற்​றும் பல்வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் பங்​கேற்​று, நினை​விடத்​தில் மரி​யாதை செலுத்​துகின்​றனர்.

ராம​நாத​புரம் மாவட்​டம் கமுதி அருகே பசும்​பொன்​னில் முத்​து​ராமலிங்​கத் தேவரின் 63-வது குருபூஜை விழா மற்​றும் 118-வது ஜெயந்தி விழா ஆகியவை யாக​சாலை பூஜை, லட்​சார்ச்​சனை​யுடன் நேற்று முன்​தினம் தொடங்​கின. நேற்று 2-வது நாளாக யாக​சாலை பூஜை, லட்​சார்ச்​சனை விழா நடை​பெற்​றது.

ஏராள​மான பொது​மக்​கள் பால்​குடம், முளைப்​பாரி எடுத்து ஊர்​வல​மாக வந்​தனர். நூற்​றுக்​கணக்​கானோர் வரிசை​யில் நின்று தேவர் நினை​விடத்​தில் மரி​யாதை செலுத்​தினர். இன்று (அக். 30) தேவர் ஜெயந்தி மற்​றும் குருபூஜை விழா அரசு விழா​வாக நடை​பெறுகிறது. இன்று காலை 8.30 மணிக்கு குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் தேவர் நினை​விடத்​தில் மரி​யாதை செலுத்​துகிறார். தொடர்ந்​து, தேவர் வாழ்ந்த வீட்​டைப் பார்​வை​யிடு​கிறார்.

தேவர் நினை​விடப் பொறுப்​பாளர் காந்​தி​மீ​னாள் நடராஜனை சந்​தித்து நலம் விசா​ரிக்​கிறார். இதற்​காக குடியரசு துணைத் தலை​வர் மதுரை விமான நிலை​யத்​திலிருந்து இந்​திய விமானப்​படை ஹெலி​காப்​டர் மூலம் பசும்​பொன் தேவர் நினை​விடம் அருகே அமைக்​கப்​பட்​டுள்ள ஹெலிபேட் தளத்​தில் வந்​திறங்​கு​கிறார். இதே​போல, மதுரையி​லிருந்து காரில் பசும்​பொன் வரும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் காலை 9.30 மணிக்கு தேவர் நினை​விடத்​தில் மரியாதை செலுத்​துகிறார்.

தொடர்ந்​து, அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ, முன்னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம், வி.கே.சசிகலா, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், தமிழ் மாநில காங்​கிரஸ் கட்​சித் தலை​வர் ஜி.கே.​வாசன் உள்​ளிட்ட பல்​வேறு அரசி​யல் கட்சித் தலை​வர்​கள், சமு​தாய அமைப்​பு​களின் தலை​வர்​கள் மரி​யாதை செலுத்த உள்​ளனர்.

தேவர் குருபூஜை விழாவை முன்​னிட்டு ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா தலை​மை​யில், ராம​நாத​புரம் சரக டிஐஜி மூர்த்​தி, மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் ஜி.சந்​தீஷ் மற்​றும் 10 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்பு பணியில் ஈடு​பட்​டுள்​ளனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *