கம்பம் தாண்டுதல் விளையாட்டில் இந்தியாவின் டாப் வீரர்கள் தேவ் மீனாவும், குல்தீப் யாதவும்.
அனைத்து இந்தியா பல்கலைக்கழக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட இருவரும், தங்களது பல்கலைக்கழகத்திற்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்திருக்கின்றனர்.
மகாராஷ்டிராவின் பன்வேல் ரயில் நிலையத்தில் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் இருவரையும் ரயிலில் இருந்து கீழே இறங்கச் சொல்லியிருக்கிறார்.
இதற்குக் காரணம், இவர்களிடம் இருந்த கம்புகள். தேவ் மற்றும் குல்தீப், தாங்கள் விளையாட்டு வீரர்கள் என்றும், தங்களுடைய விளையாட்டிற்கு கம்பு அவசியம் என்றும் எவ்வளவு கூறியும் டி.டி.இ கேட்கவில்லை.

டி.டி.இ மீண்டும் மீண்டும் கம்புகளை ரயிலில் கொண்டு வர அனுமதி இல்லை என்று கூறியிருக்கிறார்.
இந்தப் பிரச்னையால் தேவும், குல்தீப்பும் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் பன்வேல் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.
அவர்கள் அபராதம் கட்டுவதாகக் கூறியும் டி.டி.இ ஒத்துக்கொள்ளவில்லை.
2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தேசியக் கூட்டமைப்பு சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் 5.35 மீட்டர் கம்பத்தைத் தாண்டி தேசிய சாதனை படைத்துள்ளார்.