‘கம்பெனிக்காரனுக்கு உடைந்தயா நிக்குறதுதான் சமூகநீதியா?’ – கேள்வி கேட்கும் மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள் |“Is Backing the Company Management Called Social Justice?” – Manjolai Estate Workers Demand Answers

Spread the love

தண்ணியை நிறுத்திவிட்டார்கள். ரேஷனை நிறுத்திவிட்டார்கள். பேருந்தை நிறுத்திவிட்டார்கள். முழுமையாக நெருக்கடி கொடுத்து எங்களை அப்புறப்படுத்த நினைக்கிறார்கள்.

பொங்கல் பரிசைக்கூட எங்களுக்கு கொடுக்கவில்லை. நாங்கள் இருப்பது மாஞ்சோலையில், ஆனால் மணிமுத்தாறில் வந்து பொங்கல் பரிசையும் ரேஷனையும் வாங்க சொல்கிறார்கள். அதை வைத்து நாங்கள் மலையை விட்டு காலி செய்துவிட்டோம் என நிரூபிக்கப் பார்க்கிறார்கள். ஒரு நாள் வேலைக்கு சென்றால்தான் எங்களுக்கு 450 ரூபாய் சம்பளம். எங்களின் ரத்தத்தை சிந்தி வேலை பார்த்திருக்கிறோம். நாங்கள்தான் அந்த வனத்துக்கே பாதுகாப்பு” என்றார்.

நாலுமுக்கை சேர்ந்த ஸ்டெல்லா மேரி பேசுகையில், “ஒரு நாளைக்கு 2 பேருந்து விட்டுக் கொண்டிருந்தார்கள். அதுதான் பெண்களுக்கு உதவியாக இருந்தது. இப்போது ஒரு பேருந்தை நிறுத்திவிட்டார்கள். நாங்கள் எப்படி மேலே செல்ல முடியும்?

நாங்கள் ரத்தம் சிந்தி வேலை பார்த்திருக்கிறோம். எங்களுக்கு அந்த காடுதான் எல்லாமே. இப்படி ஊர் இருக்கிறது மக்கள் இருக்கிறார்கள் என்று கூட. எங்களுக்கு தெரியாது. அட்டை எங்களின் பாதி ரத்தத்தை உறிந்தது. அந்த நிறுவனம் மீதி ரத்தத்தை உறிந்துவிட்டது. நாங்கள் எதையும் சண்டை போட்டு கேட்டதில்லை. கும்பிட்டுதான் கேட்டிருக்கிறோம்.

ஒவ்வொரு லைனாக சென்று வீடு வீடாக திமுக-வுக்கு ஓட்டு கேட்டிருக்கிறோம். முதல்வர் ஐயா எங்களுக்கு உரியதை செய்து கொடுக்க வேண்டும்.

நாங்கள் 267 குடும்பத்தினர் பொங்கல் பரிசு வாங்கவில்லை. எஸ்டேட்டை விட்டு கீழே போய் வாங்கிக் கொள்ளுங்கள் என்கின்றனர். இதையெல்லாம் யாரும் கேட்கவில்லை.

நீதி கிடைக்காமல் எஸ்டேட்டை விட்டு இறங்கமாட்டோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *