சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
கருணாநிதியின் 6-வது நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். மேலும் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திலும் முதல்வர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அமைச்சர் உதயநிதி, எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.