கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

dinamani2F2025 08
Spread the love

மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்று வருகின்றது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஏழாவது ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூராா் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு இன்று காலை மாலை அணிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, ஓமந்தூராா் மருத்துவமனை வளாகத்தில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்று வருகின்றது.

இந்த பேரணியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, கட்சிப் பொருளாளர் டி.ஆர். பாலு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இறுதியாக, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தவுள்ளார்.

On the occasion of the death anniversary of late DMK leader Karunanidhi, a peaceful rally is being held under the leadership of Tamil Nadu Chief Minister M.K. Stalin.

இதையும் படிக்க : சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: என்கவுன்டரில் மணிகண்டன் பலி

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *