இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் அமைச்சர் ஐ.பெரியசாமியின் கருத்துத் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “எல்லோருக்கும் ஒரு கருத்து இருக்கிறது. அவருடைய கருத்தை அவர் சொல்லியிருக்கிறார். எங்கள் கட்சியில் இருப்பவர்கள் அவர்களுடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

கருத்துரிமை இருப்பதால் பேசுகிறார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டியது தமிழ்நாட்டின் இந்திய கூட்டணியின் தலைவராக இருக்கக்கூடிய முதல்வர் ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும்தான்” என்று பதிலளித்திருக்கிறார்.