கரூர் அருகே ரூ.4.85 கோடியில் சாலை பணிகள்: செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார் | Rs.4.85 Crore Worth Road Construction Work: Senthil Balaji Inaugurated

1379540
Spread the love

கரூர்: கரூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தார், சிமெண்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட ரூ.4.85 கோடியிலான பணிகளுக்கான தொடக்க விழா இன்று (அக்.12ம் தேதி) நடைபெற்றது.

கரூர் அருகேயுள்ள காதப் பாறை ஊராட்சி பூர்ணிமா கார்டனில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.64.80 லட்சத்தில் தார் சாலையை பலப்படுத்தும் பணி தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ பணிகளை தொடங்கி வைத்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வீரபத்திரன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் சரவணன், மண் மங்கலம் வட்டாட்சியர் மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, ஏஐபீஇஏ நகரில் ரூ.27.33 லட்சத்தில் தார் சாலையினை பலப்படுத்துதல் கரூர் காதப் பாறை ஊராட்சியில் சிறப்பு நிதி (சேமிப்பு நிதி) 2025- 2026 திட்டத்தின் கீழ் அன்பு நகரில் ரூ.64.16 லட்சம், பிரேம் நகரில் ரூ.26.57, காந்தி நகரில் ரூ.70.64 லட்சத்தில் தார் சாலை மேம்பாட்டு பணி.

முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் (2025- 2026) என்ற திட்டத்தின் கீழ் தங்கம் நகரில் ரூ.39.31 லட்சம், முத்து நகரில் ரூ.34.31 லட்சம், நெரூர் தெற்கு ஊராட்சி வேடிச்சிபாளையம் காட்டுத் தெருவில் ரூ.16.16 லட்சத்தில் தார் சாலைகள் அமைக்கும் பணி.

மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சியில் சிறு கனிம நிதி 25 சதவீத திட்டத்தின் (2025- 2026) கீழ் ரூ.20 லட்சத்தில் புல்லா கவுண்டன்புதூரில் 60,000 லி., தலா ரூ.22 லட்சத்தில் நெரூர் மேற்கு தெருவில் 1 லட்சம் லி., திருமுக் கூடலூரில் 1 லட்சம் லி., கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைத்து குழாய் விஸ்தரிப்பு செய்யும் பணி.

அரசு காலனி காந்தி நகர் 2 மற்றும் 4-வது தெருக்களில் ரூ.22 லட்சம். நெரூர் வடக்கு ஊராட்சியில் 3 இடங்களில் ரூ.8 லட்சம், ரூ.5 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம், சோமூர் ஊராட்சி திருமுக்கூடலூரில் ரூ.8 லட்சம், மற்றொரு இடத்தில் ரூ.14.30 லட்சத்தில் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகள்.

ஒத்தக்கடை கரூர் மெயின்ரோடு முதல் கால்நடை மருத்துவமனை வரை ரூ.11 லட்சம் சாலையினை பலப்படுத்தும் பணியையும், சோமூரில் ரூ.5.40 லட்சத்தில் புதிய கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.4.85 கோடியில் புதிய திட்ட பணிகளை தொடங்கி வைக்கப்பட்டன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *