கரூர் ஆட்சியர் குறித்து அவதூறு: பிஆர்ஓ புகாரில் தாந்தோணிமலை போலீஸார் வழக்கு | Defaming social media post against Karur Collector: Case filed

1378758
Spread the love

கரூர்: கரூர் ஆட்சியர் குறித்து முதநூலில் அவதூறு பதிவு தொடர்பாக பிஆர்ஓ புகாரில் தாந்தோணிமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 116 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக முகநூலில் செல்வராமச்சந்திரன் சின்னதுரை என்ற பெயரில் ஆட்சியர் மீ.தங்கவேல் குறித்து அவதூறாக நேற்று பதிவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கரூர் எஸ்.பி. அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அளித்த புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த முகநூல் பதிவில், “இந்த கரூர்ல கலெக்டர், கலெக்டர்னு ஒருத்தர் இருப்பாரு அவருக்கு வேலை ஸ்கூலுக்கு போய் ரீல்ஸ் போடுறது. பாலத்துக்கு அடியில் ரீல்ஸ் போடுறது. டூவீலர் ஓட்டுறவன ஓவர்டேக் பண்ணி ஏன் ஹெல்மெட் போடலை என்று சொல்லி அந்த வீடியோ போடுறது.

இந்த சம்பவத்தின் போது எந்த ஸ்கூலுக்கு ரீல்ஸ் எடுக்க போயிருந்தாரு. சட்டம் ஒழுங்கை எல்லாம் முதல் நாளே புஸ்ஸி ஆனந்துக்கு ஹேன்டோவர் பண்ணிட்டாரு அப்படிதானே. கலெக்டரை கேள்வி கேட்காமல் என்னடா கட்சி சண்டை நடத்துறீங்க” உள்பட இன்னும் பல அவதூறான வார்த்தைகளுடன் கூடிய கருத்துகள் இடம்பெற்றுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *