பின்னர் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜராகி இருந்த மூத்த வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் என்.ஆர் இளங்கோ ஆகியோர்,
“கரூர் சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆணையத்தை பொறுத்தவரைக்கும் விசாரணை அமைப்புகளின் புலன் விசாரணைக்குள் தலையிடாமல் தனியாக சுய தீன விசாரணையை நடத்தும் வகையில்தான் அமைக்கப்பட்டது
எனவே தனி நீதிபதி ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
மேலும், “எதிர்காலத்தில் கூட்டங்கள் நடத்த விதிமுறைகளை வகுப்பதற்கும், நிவாரணம் பரிந்துரைக்கவுமே ஆணையம் அமைக்கப்பட்டது” என கூறினார்கள்.

அப்போது பேசிய நீதிபதிகள், “கரூர் சம்பவம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றம் விசாரித்த முந்தைய முறையீட்டில் குழப்பம் உள்ளது அவர்கள், சில தவறுகள் செய்திருக்கலாம்” என்று கூறினர்.
குறிப்பாக, “உயர் நீதிமன்றம் விசாரணைகளை நடத்திய முறையில் செயல்முறை மீறல்கள் உள்ளதாக தெரிகிறது” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும், “மதுரை அமர்வு இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்து வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை எவ்வாறு எடுத்துக்கொண்டது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என்றும் கூறினர்.
உயர் நீதிமன்ற பதிவாளர், வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அடிப்படையை விளக்கும் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி, இந்த விவகாரத்தை முதலில் விசாரிப்போம் என கூறினர்.
எனவே, உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டனர்.
மேலும், பதிவாளரின் அறிக்கையின் நகல்களை அனைத்து தரப்பினருக்கும் வழங்குமாறும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.