கவுண்டர்கள், பட்டியலின மக்கள், மூன்றாவதாக நாயக்கர் சமுதாய மக்கள் என பல்வேறு பிரிவு சார்ந்த மக்கள் தொகுதி முழுதும் பரவி காணப்பட்டாலும், பள்ளப்பட்டி நகராட்சியில் உள்ள சுமார் 30 ஆயிரம் இஸ்லாமிய வாக்காளர்களின் வாக்குகள் அரவக்குறிச்சி தொகுதியின் வெற்றி தோல்வியை நிர்ணையம் செய்வதாக உள்ளது.
கடந்த 2021 தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜக-வில் போட்டியிட்ட முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை வீழ்த்தி எம்எல்ஏ ஆனார் இளங்கோ.
மீண்டும் அவர் கட்சியில் சீட் கேட்க, இவருக்கு போட்டியாக நொய்யல் குணசேகரன், பரமத்தி ஒன்றியம் கருணாநிதி உள்ளிட்ட பலர் கட்சியில் சீட் கேட்டு களம் இறங்க தயாராகி வருகின்றனர்.
கூட்டணிக்கு தொகுதி கைமாறும் பட்சத்தில் புதிய திராவிட கழகம் சார்பில் ராஜ்கவுண்டர், மதிமுக நிர்வாகி ஆசை சிவா என பலர் ரேஸ் ஓட தயார் நிலையில் நிற்கினர்.
அதிமுகவில் கரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் வழக்கறிஞர் கரிகாலன், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ. கலையரசன் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சரவணன் ஆகியோர் சீட் கேட்டு தலைமையிடம் அழுத்தம் கொடுத்த வருகின்றனர்.
திமுகவில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் யார்? என்பதை பொறுத்து நால்வரில் ஒருவருக்கு சீட் என முடிவு செய்யப்பட்டுள்ளதாம் கட்சி தலைமை .
தவெகவில் பெயர் சொல்லும் அளவிற்கு மக்கள் அறிமுகம் செல்வாக்கு கொண்டவர்கள் யாரும் இல்லையென்றாலும், தொகுதியில் உள்ள இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் முதல் வாக்காளர்கள் என விஜய் பெறும் கனிசமான வாக்குகள் திராவிட கட்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
கட்சிக் கட்டமைப்பு, கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு, சிறுபான்மையினரின் வாக்கு உள்ளிட்ட விஷயங்களால், தற்போதைக்குத் தொகுதியில் உதயசூரியன் கூடுதலாகப் பிரகாசிக்கிறது எனலாம். எனினும் வேட்பாளர் தேர்வும், தவெக பிரிக்கும் வாக்குகளும் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.