கரூர் துயரம்: அவதூறு கருத்து வெளியிட்டதாக கைதான யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் | YouTuber Felix Gerald arrested for making defamatory comments granted bail

1378412
Spread the love

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். சுமார் 100 பேர் காயமடைந்தனர். இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவம் குறித்து பல்வேறு மாறுபட்ட தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின.

கரூர் சம்பவம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை எச்சரித்திருந்தது. இந்த சூழலில், கரூர் சம்பவம் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்பியதாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு நேற்று கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. பெலிக்ஸின் ஜாமீன் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வரும் 3ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *