கரூர் பலி: அரசியல் விளையாட்டைத் தொடங்கிவிட்டது பாஜக! – திருமாவளவன்

Spread the love

கரூர் நெரிசல் பலி விவகாரத்தில் பாஜக தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை (செப்.27) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய பாஜக எம்.பி. ஹேமமாலினி தலைமையிலான குழு இன்று கரூர் வந்துள்ளது. அந்த குழு கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தொல். திருமாவளவன், “கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது பாஜக.

கரூரில் நடந்த கொடூரத்தைப் பற்றி ‘உண்மை கண்டறியும் குழுவை’ அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதே ஆகும்.

இந்நிலையில் காங்கிரஸ் பேரியக்கமும் உடனடியாக இதுபோன்ற உண்மை அறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம். பாஜக’வின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாகவுள்ளது.

ராகுல் காந்தி இது தொடர்பாக தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்திட வேண்டுமென விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

VCK leader Thirumavalavan says that BJP has started a political game in Karur stampede issue

இதையும் படிக்க | சென்னை தி.நகர் மேம்பாலத்தை திறந்துவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *